Friday, September 20, 2019

காதல் கொண்டேன்!


காதல்மீதே காதல் கொண்டேன்!
காதல் கள் குடித்து
நாடி நரம்பு உதிரமென
காதல் நிறைந்திருந்தும் தீரவில்லை!!
வேட்கைக் கொண்ட வேங்கையென
எங்கெங்கு காதல் நோக்கினும்
அங்கங்கே காதல் பருகினேன்!!
திகட்டா தேனமுதாய் காதல்!!!
காதல்பித்துப் பிடித்தும் தேடினேன்!
அண்டமும் யாக்கையும் வேறனைத்தும்
நிரம்பி நிறைந்து காத்திருக்கிறது 
எனக்கே எனக்கான என் காதல்!!


Monday, May 20, 2019

நீ யாரோ!!

எப்போதிருக்கும் வசீகர புன்னகையில்லை,
சுண்டியிழுக்கும் நேர்ப் பார்வையில்லை,
முக ரோமங்களில் கூட அனேக வேறுபாடுகள்! 
தொலைந்த இரவுகளின் பிம்பம்
நீ விட்டுச் சென்ற தலையனை வாசம் போல
என் மனத்துகள்களில் தேங்கியிருக்கிறது.
அதற்கும் இதற்கும் எத்துணை வித்தியாசம்!!!
உன்னிடம் இதைப்பற்றிச் சொன்னதும் சிரித்தாய்!
மீசையை மழிக்க எவ்வளவு நேரமாகுமென!
உன்னிடம் எப்படிச் சொல்லுவேன்;
எனக்காக உருவத்தை மாற்றிக் கொண்டாலும்
என்னுள் புதைந்திருக்கும் நீ, நீயில்லை என்று!
சிமிட்டலில் தெரித்து விழும் கண்ணீர் போல
விளையாட்டாய் என்னை நீங்கிச் சென்ற பின்
நீ யாரோ நான் யாரோ தானே!!!

Monday, April 8, 2019

தவம்!!

இமை மூடாமல் விழித்திருக்கிறேன்
உனதொரு பார்வைப் பார்க்க !
செவி நீட்டி விழைந்திருக்கிறேன்
உனதொரு வார்த்தைக் கேட்க !
ஐம்புலனும் கட்டுண்டு வீழ்கிறது
உனதொரு புன்னகையை எதிர் நோக்குகயில்.
நொடி நிமிடம் நாளென நேரத் துகள்
 அனைத்தும் நீ நிரப்ப காலி ஏடுகளாய்!!
பார்த்தால் தான் காதல் வருமென யார் சொன்னார்கள்?
உணர்விலே தோன்றி நினைவிலே கலந்த
ஒவ்வொரு சுவாச மூச்சிலும்  உன்னைப் பற்றிய எதிர்பார்ப்புகள்!
ஆதலால் காதல் தவம் செய்கிறேன்
உன்னை எண்ணி, உன்னையே வரமாய்க் கேட்க!
என்றேனும் ஒரு நாள் வருவாயா..
அம்மா என்று அழைக்க!!!

Thursday, February 21, 2019

காதலா காமமா!!!

ஓர் அழகான மாலைப்பொழுதில்
உன்னிடம் நெருங்கி கிறங்கி
முதல் இதழ் முத்தம் தருகயில்,
சொக்கும் வில் விழிகள் கொண்டு
கோபக்கேள்வி தொடுப்பாயென 
மறுகி நான் நின்றேன்!
ஆனால் திகட்ட திகட்ட
ஒருங்கி நின்று கட்டியணைத்து
மறு முத்தத்தால் திணறடைத்தாய்!!
இது காதலா இல்லை காமமா
என்று நீ விழையும் முன் சொல்கிறேன் 
என்னுள் நீயும் உன்னுள் நானும்
இதயத்துடிப்புகளும் நினைவுகளும் கூட
எப்பொழுதோ கலந்து இணைந்த பின் 
காதலேது காமம் ஏது!!!

கிறுக்கல்கள்!!!

காதலையும் காதலித்துப் பார் 
கிறுக்கல்கள் கூட கவிதையாகும்!! ❤


============================================================================

காத்திருந்த கணங்களும்
தனித்திருந்த நிமிடங்களும் 
கவிதையால் நிரப்புகின்றேன் 
ஆயினும் இதயத்தின் மௌனம் மௌனமாகவே இருக்கிறது 
உன் ஓர் வார்த்தை இல்லாமல்!!

===========================================================================

அணுவெல்லாம் நீ
என் அனுவாகிய நீ
நான் வேந்தனில்லை என்றாலும் 
விரிந்த என் சாம்ராஜ்ஜியத்தின் 
இதய ராணி நீ!!! ️

===========================================================================

கண்ணுரச காலுரச
உன் திமிர் பார்வை 
என் தேகமெங்கும் உரச
பற்றியெரியும் உணர்ச்சியில் 
இதயம் உந்தன் காலடியில்
பூந்தென்றல் வீசி உன் இதழ் முத்தம் தாராயோ
உன் இதயத்திடம் என் இதயம் சேர்ப்பாயோ!!

===========================================================================

கவிதை எழுத நேரமில்லை 
உனை நினைத்த பின்பு என்னிடம் வார்த்தையே இல்லை
உணர்விர்க்கும் எழுத்திர்க்கும் நடுவில் நீ
முடிந்தால் கேட்டுப்பார் 
என் இதயத்துடிப்பின் ஓசையிலும் நீ!!

===========================================================================


அருகே இருக்க நினைத்தும் தூரம் செல்கிறேன் நான்
தூரம் செல்ல வேண்டிய நினைவுகளை
உன்னைச் சுற்றியே விட்டு விட்டு
விதியோ மதியோ எதுவும் புரியவில்லை
புரிந்தது ஒன்று மட்டும் தான் 
எனக்கு உள்ளே வெளியே 
உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கும் 
சுவாச மூச்சு நீ!!

===========================================================================

இதயக் கள்வன்!!

பார்க்க பார்க்க பிடிக்குதடி
மனசு பாதை மாறி துடிக்குதடி;
உன் ஓர பார்வை தரும் சலசலப்பில்
விதிர்த்து ஏங்கி தவிக்குதடி!

கொலை களத்தில் குருதி சிந்த
நான் கூர்வாள் ஏந்துவேனடி;
அச்சமயம் கூட காதல்  கவி எழுத 
கூர்முனை தேட வைத்தாயடி!

கொலைகாரன் என்றேன் கயவனென்றேன் 
இல்லையென மறுத்து சிரித்தாயடி;
கள்வன் மட்டுமே எனக்கூறி 
வெட்கி ஓடிச் சென்றாயடி!


Friday, June 8, 2018

என் காதல்!!

மழை நின்ற பின்பும் தூறல் போல 
    உனை மறந்த பின்பும் காதல் 
அலை கடந்த பின்பும் ஈரம் போல 
     உனை பிரிந்த பின்பும் காதல் 
                                  -- நன்றி கபிலன் (பாடலாசிரியர் - ராமன் தேடிய சீதை ) 

பூக்கள் உதிர்ந்த பின்னும் காற்றில் எழும் மகரந்தம் போல 
     நினைவனைத்தும்  காதல்!
மழை வந்த பின்பும் தகிக்கும் மண் வாசம் போல 
      சுவாசமானைத்தும் காதல்!!

  உடைந்த கண்ணாடித்துகள்களில்  எஞ்சியிருக்கும் பிம்பம் போல 
       இதயக்கூட்டின் உயிரணுவனைத்தும் காதல்! 
நீள்வான நீல நிறம் போல 
       பரவியிருக்கும் உணர்வனைத்தும் காதல்!! 

பாலைவனத்தின் கற்றாழை மலர் போல 
       என்னுள் பூத்திருக்கும் காதல்!
உணவுண்ண காத்திருக்கும் மீன்கொத்தியை போல 
       என்னுள் பசித்திருக்கும் காதல்!!

புது ஜனனம் பார்க்கத்  தவிக்கும்  தாய் போல 
       ஒவ்வொரு நொடியிலும் விழி நோக்கும் காதல்! 
துரத்தியடித்தாலும் கால் நக்கும் நாய்க்குட்டி போல 
மறுத்தோடி மறைந்தாலும் மரணிக்கும் வரை காதல்!!!