மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
-- நன்றி கபிலன் (பாடலாசிரியர் - ராமன் தேடிய சீதை )
பூக்கள் உதிர்ந்த பின்னும் காற்றில் எழும் மகரந்தம் போல
நினைவனைத்தும் காதல்!
மழை வந்த பின்பும் தகிக்கும் மண் வாசம் போல
சுவாசமானைத்தும் காதல்!!
உடைந்த கண்ணாடித்துகள்களில் எஞ்சியிருக்கும் பிம்பம் போல
இதயக்கூட்டின் உயிரணுவனைத்தும் காதல்!
நீள்வான நீல நிறம் போல
பரவியிருக்கும் உணர்வனைத்தும் காதல்!!
பாலைவனத்தின் கற்றாழை மலர் போல
என்னுள் பூத்திருக்கும் காதல்!
உணவுண்ண காத்திருக்கும் மீன்கொத்தியை போல
என்னுள் பசித்திருக்கும் காதல்!!
புது ஜனனம் பார்க்கத் தவிக்கும் தாய் போல
ஒவ்வொரு நொடியிலும் விழி நோக்கும் காதல்!
துரத்தியடித்தாலும் கால் நக்கும் நாய்க்குட்டி போல
மறுத்தோடி மறைந்தாலும் மரணிக்கும் வரை காதல்!!!
No comments:
Post a Comment