காதல்மீதே காதல் கொண்டேன்!
காதல் கள் குடித்து
நாடி நரம்பு உதிரமென
காதல் நிறைந்திருந்தும் தீரவில்லை!!
வேட்கைக் கொண்ட வேங்கையென
எங்கெங்கு காதல் நோக்கினும்
அங்கங்கே காதல் பருகினேன்!!
திகட்டா தேனமுதாய் காதல்!!!
காதல்பித்துப் பிடித்தும் தேடினேன்!
அண்டமும் யாக்கையும் வேறனைத்தும்
நிரம்பி நிறைந்து காத்திருக்கிறது
எனக்கே எனக்கான என் காதல்!!