Wednesday, September 14, 2011

காதலிக்காமலே!!


நாம்,
காதலிக்காமலே இருந்திருக்கலாம்!
ந‌ம்,
காத‌ல் சுவ‌டுக‌ள்
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல்
இருப்ப‌து ப‌ர‌வாயில்லை!
ஆனால்,
ந‌ம‌க்கே அது
ம‌றைவ‌தென்ப‌து மிக‌வும்
வ‌லி த‌ருவ‌தாய்!
ஒன்று ம‌ட்டும் புரிய‌வில்லை.
கால‌ம் க‌ட‌ந்துவிட்ட‌தா?
இல்லை, காத‌ல் தான்
க‌ச‌ந்துவிட்ட‌தா?
நீ, இல்லாத‌
ஒவ்வொரு ம‌ணித்துளியும்,
நெடும் இர‌வும்,
சுடும் ப‌க‌லும்,
என் வாழ்க்கையைப்
பாலைவ‌ன‌மாக‌
மாற்ற‌ வ‌ல்ல‌தாய்!
நீ,
ப‌ரந்த‌ நீல‌ வான‌மாய்!
நானோ,
வ‌ர‌ண்ட‌ நீள் பூமியாய்!
இக்க‌ரைக்கு
அக்க‌ரை ப‌ச்சை தான்
ம‌றுக்க‌வில்லை
ஆயினும் வந்திருக்க‌லாம்
நீ,
ஓர் ம‌ழைத்துளியாய்!
நான் காத‌லித்திருக்க‌லாம்
உன்னை ம‌ட்டும்ம‌ல்லாம‌ல்
என்னையும் கொஞ்ச‌ம்!
வாழ்க்கை இவ்வள‌வு
த‌னிமையாய் மாறும்
என்ப‌து தெரிந்திருந்தால்!
எனக்குத் தெரியவில்லை!
நீ,
என்னை நீங்கிச் செல்வாயா?
இல்லை,
செல்வ‌தையாவ‌து சொல்வாயா?
ம‌ன‌தும் அறிவும் வெவ்வேறாய்!
நெருங்கிச் செல்வ‌தும்
வில‌கி ஓடுவ‌தும்
உனக்கோர் விளையாட்டாய்!
ம‌ற‌ந்துவிடாதே!
நீ விளையாடும் பொருள்
என் இத‌ய‌ம் என்ப‌தை!
என்னைப் புரிந்து கொள்ள‌
என‌க்கான‌ உன்
ஓர் நிமிட‌ம் த‌ருவாயா?
உன‌க்கே உரிதான‌ ப‌தில்க‌ளை
உன்னை அன்றி
யார் தான் கூறுவ‌ர்?
காத்திருக்கிறேன்,
க‌ன‌விலாவ‌து க‌ண்ண‌சைப்பாய் என்று!!

No comments:

Post a Comment