Sunday, October 23, 2011

கண்ணீரின் கோபம்!!

இவ்வுலகில் நல்தாய் மார்புப்பால்
குடித்த ஆண்களுக்குக் கூட‌
மற்றவள் முந்தானைப் பறிக்க ஆசை!!

கலிகாலம்!

வாய் கிழிய பெண்ணியம் பேசும் பலரும்
பெண்களுடன் படுக்கையை மட்டும்
பகிரும் அவலம்!

இதெல்லாம் போதாதென்று
சதவிகித ஒதுக்கீடு தருகிறார்களாம்;
பெண்கள் வாழ்வினை அவர்களே வாழ்ந்திட‌!

சிரிப்பு தான் வருகிறது;
வலி தரும் வடுகளுடன்!

பற்களும் நகங்களும் ஆயுதமெனக் கூறிய‌
காந்தி கூட இன்றிருந்தால் கூறியிருப்பார்
பெண்ணே கத்தியெடு என்று!

பெண்களுக்கு பெண்களே குழி தோண்டும் பொழுது
ஆண்களைக் குற்றம் சாட்டுவது வீண்!

இறைவன் நேரில் வந்தால் எழுப்பப்படும்
வரங்களுள் ஒன்று - இப்பெண்களுக்கு மறுபிறவியிலாவது
ஆணாகும் வரம் தா; என்பதுவே!

புதுமைப் பெண் கனவு கண்ட‌
பாரதி கூட இன்று உயிரோடிருந்தால்
ஆமோதிப்பாரோ என்னவோ!!
----------------------------------------------------
குறிப்பு: மேற்கூறியவை எல்லா ஆண்களையும் சுட்டுபவை அல்ல!!
----------------------------------------------------

Wednesday, October 12, 2011

முள்ளும் மலரும்!!


ரோஜாக்களுக்கு எப்பொழுதும் புரிவதில்லை
அதன் முட்களின் காரணத்தால் மட்டுமே
பலரும் அவற்றைக் கசக்குவதில்லை என்று!
நான் இதை புரிந்துக் கொண்டேன் இப்பொழுது,
நானே எனது முட்களை வெட்டியதால்!!

Wednesday, September 14, 2011

நினைவு!! காதல்!!


என் உயிர் தோழா!
பார்த்த நொடி முதல்
உன் சிரிப்பொலியிலும்
உன் விழி ஓரங்களிலும்
சமர்ப்பிக்க்பட்டது‍‍‍ ‍‍‍என் இதயம்!!

உன் ஒற்றைச் சொல்லில்
சுழலுது என் பூமி
இது உனக்கும் தெரியும்
இருப்பினும் துன்பம் தருகிறாய்
மௌனம் சாதித்து!!

பார்க்கும் பொருளனைத்தும்
உன் நினைவுகளாய்!
கண்களை மறைக்கும்
கண்ணீர் திரை கொண்டு
மறக்க முயல்கிறேன்!
ஆனால், மறைய மறுத்து
மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கின்றன‌
உன் நினைவலைகள்!!

நினைவனைத்தும் நீயாய்!
கனவனைத்தும் நீயாய்!
உயிர் கூட உன்னுடையது தான்
நான் மட்டும் தனிக்கூடாய்!

வரண்ட பூமியாய் என் மனது
உன் நினைவு மழை மட்டும் போதாது
உன்னிடம் கேட்பது இது தான்
உன் வானம் என் வசமாகுமா??

காதலிக்காமலே!!


நாம்,
காதலிக்காமலே இருந்திருக்கலாம்!
ந‌ம்,
காத‌ல் சுவ‌டுக‌ள்
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல்
இருப்ப‌து ப‌ர‌வாயில்லை!
ஆனால்,
ந‌ம‌க்கே அது
ம‌றைவ‌தென்ப‌து மிக‌வும்
வ‌லி த‌ருவ‌தாய்!
ஒன்று ம‌ட்டும் புரிய‌வில்லை.
கால‌ம் க‌ட‌ந்துவிட்ட‌தா?
இல்லை, காத‌ல் தான்
க‌ச‌ந்துவிட்ட‌தா?
நீ, இல்லாத‌
ஒவ்வொரு ம‌ணித்துளியும்,
நெடும் இர‌வும்,
சுடும் ப‌க‌லும்,
என் வாழ்க்கையைப்
பாலைவ‌ன‌மாக‌
மாற்ற‌ வ‌ல்ல‌தாய்!
நீ,
ப‌ரந்த‌ நீல‌ வான‌மாய்!
நானோ,
வ‌ர‌ண்ட‌ நீள் பூமியாய்!
இக்க‌ரைக்கு
அக்க‌ரை ப‌ச்சை தான்
ம‌றுக்க‌வில்லை
ஆயினும் வந்திருக்க‌லாம்
நீ,
ஓர் ம‌ழைத்துளியாய்!
நான் காத‌லித்திருக்க‌லாம்
உன்னை ம‌ட்டும்ம‌ல்லாம‌ல்
என்னையும் கொஞ்ச‌ம்!
வாழ்க்கை இவ்வள‌வு
த‌னிமையாய் மாறும்
என்ப‌து தெரிந்திருந்தால்!
எனக்குத் தெரியவில்லை!
நீ,
என்னை நீங்கிச் செல்வாயா?
இல்லை,
செல்வ‌தையாவ‌து சொல்வாயா?
ம‌ன‌தும் அறிவும் வெவ்வேறாய்!
நெருங்கிச் செல்வ‌தும்
வில‌கி ஓடுவ‌தும்
உனக்கோர் விளையாட்டாய்!
ம‌ற‌ந்துவிடாதே!
நீ விளையாடும் பொருள்
என் இத‌ய‌ம் என்ப‌தை!
என்னைப் புரிந்து கொள்ள‌
என‌க்கான‌ உன்
ஓர் நிமிட‌ம் த‌ருவாயா?
உன‌க்கே உரிதான‌ ப‌தில்க‌ளை
உன்னை அன்றி
யார் தான் கூறுவ‌ர்?
காத்திருக்கிறேன்,
க‌ன‌விலாவ‌து க‌ண்ண‌சைப்பாய் என்று!!

வாழ்க்கை வட்டம்!!!!!!!


வாழ்க்கை தெரிந்தது ஓர் வட்டமாய்!
அதில் சதுரங்கம் ஆட நினைத்தேன்!!
சிற்சில கருப்பு வெள்ளைச் சதுரங்களால்
என் வாழ்வில் எத்தனை எத்தனை
இழப்புகளின் தொடக்கங்களும்
இன்பங்களின் முடிவுகளும்!!
இப்போது நினைக்கிறேன்!
வாழ்க்கை வட்டமாகவே இருந்திருக்கலாம்,
என்னைப் போல‌
ஆதியும் அந்தமும் இல்லாமல்!!

இருட்டு!!!

இரவினை வெள்ளையாக்கும்
மின் விளக்குக்களிடையே
இருட்டினை நோக்கி
ஏங்கும் மின்மினிகளும்
அவள் ஆடை கிழிசல்களும்!!!