Thursday, February 21, 2019

காதலா காமமா!!!

ஓர் அழகான மாலைப்பொழுதில்
உன்னிடம் நெருங்கி கிறங்கி
முதல் இதழ் முத்தம் தருகயில்,
சொக்கும் வில் விழிகள் கொண்டு
கோபக்கேள்வி தொடுப்பாயென 
மறுகி நான் நின்றேன்!
ஆனால் திகட்ட திகட்ட
ஒருங்கி நின்று கட்டியணைத்து
மறு முத்தத்தால் திணறடைத்தாய்!!
இது காதலா இல்லை காமமா
என்று நீ விழையும் முன் சொல்கிறேன் 
என்னுள் நீயும் உன்னுள் நானும்
இதயத்துடிப்புகளும் நினைவுகளும் கூட
எப்பொழுதோ கலந்து இணைந்த பின் 
காதலேது காமம் ஏது!!!

கிறுக்கல்கள்!!!

காதலையும் காதலித்துப் பார் 
கிறுக்கல்கள் கூட கவிதையாகும்!! ❤


============================================================================

காத்திருந்த கணங்களும்
தனித்திருந்த நிமிடங்களும் 
கவிதையால் நிரப்புகின்றேன் 
ஆயினும் இதயத்தின் மௌனம் மௌனமாகவே இருக்கிறது 
உன் ஓர் வார்த்தை இல்லாமல்!!

===========================================================================

அணுவெல்லாம் நீ
என் அனுவாகிய நீ
நான் வேந்தனில்லை என்றாலும் 
விரிந்த என் சாம்ராஜ்ஜியத்தின் 
இதய ராணி நீ!!! ️

===========================================================================

கண்ணுரச காலுரச
உன் திமிர் பார்வை 
என் தேகமெங்கும் உரச
பற்றியெரியும் உணர்ச்சியில் 
இதயம் உந்தன் காலடியில்
பூந்தென்றல் வீசி உன் இதழ் முத்தம் தாராயோ
உன் இதயத்திடம் என் இதயம் சேர்ப்பாயோ!!

===========================================================================

கவிதை எழுத நேரமில்லை 
உனை நினைத்த பின்பு என்னிடம் வார்த்தையே இல்லை
உணர்விர்க்கும் எழுத்திர்க்கும் நடுவில் நீ
முடிந்தால் கேட்டுப்பார் 
என் இதயத்துடிப்பின் ஓசையிலும் நீ!!

===========================================================================


அருகே இருக்க நினைத்தும் தூரம் செல்கிறேன் நான்
தூரம் செல்ல வேண்டிய நினைவுகளை
உன்னைச் சுற்றியே விட்டு விட்டு
விதியோ மதியோ எதுவும் புரியவில்லை
புரிந்தது ஒன்று மட்டும் தான் 
எனக்கு உள்ளே வெளியே 
உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கும் 
சுவாச மூச்சு நீ!!

===========================================================================

இதயக் கள்வன்!!

பார்க்க பார்க்க பிடிக்குதடி
மனசு பாதை மாறி துடிக்குதடி;
உன் ஓர பார்வை தரும் சலசலப்பில்
விதிர்த்து ஏங்கி தவிக்குதடி!

கொலை களத்தில் குருதி சிந்த
நான் கூர்வாள் ஏந்துவேனடி;
அச்சமயம் கூட காதல்  கவி எழுத 
கூர்முனை தேட வைத்தாயடி!

கொலைகாரன் என்றேன் கயவனென்றேன் 
இல்லையென மறுத்து சிரித்தாயடி;
கள்வன் மட்டுமே எனக்கூறி 
வெட்கி ஓடிச் சென்றாயடி!