Sunday, October 23, 2011

கண்ணீரின் கோபம்!!

இவ்வுலகில் நல்தாய் மார்புப்பால்
குடித்த ஆண்களுக்குக் கூட‌
மற்றவள் முந்தானைப் பறிக்க ஆசை!!

கலிகாலம்!

வாய் கிழிய பெண்ணியம் பேசும் பலரும்
பெண்களுடன் படுக்கையை மட்டும்
பகிரும் அவலம்!

இதெல்லாம் போதாதென்று
சதவிகித ஒதுக்கீடு தருகிறார்களாம்;
பெண்கள் வாழ்வினை அவர்களே வாழ்ந்திட‌!

சிரிப்பு தான் வருகிறது;
வலி தரும் வடுகளுடன்!

பற்களும் நகங்களும் ஆயுதமெனக் கூறிய‌
காந்தி கூட இன்றிருந்தால் கூறியிருப்பார்
பெண்ணே கத்தியெடு என்று!

பெண்களுக்கு பெண்களே குழி தோண்டும் பொழுது
ஆண்களைக் குற்றம் சாட்டுவது வீண்!

இறைவன் நேரில் வந்தால் எழுப்பப்படும்
வரங்களுள் ஒன்று - இப்பெண்களுக்கு மறுபிறவியிலாவது
ஆணாகும் வரம் தா; என்பதுவே!

புதுமைப் பெண் கனவு கண்ட‌
பாரதி கூட இன்று உயிரோடிருந்தால்
ஆமோதிப்பாரோ என்னவோ!!
----------------------------------------------------
குறிப்பு: மேற்கூறியவை எல்லா ஆண்களையும் சுட்டுபவை அல்ல!!
----------------------------------------------------

Wednesday, October 12, 2011

முள்ளும் மலரும்!!


ரோஜாக்களுக்கு எப்பொழுதும் புரிவதில்லை
அதன் முட்களின் காரணத்தால் மட்டுமே
பலரும் அவற்றைக் கசக்குவதில்லை என்று!
நான் இதை புரிந்துக் கொண்டேன் இப்பொழுது,
நானே எனது முட்களை வெட்டியதால்!!